
நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை…
(FASTNEWS-COLOMBO) எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் அமுலுக்கு வருவதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது