புகையிரத திணைக்களத்தின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரிப்பு…

புகையிரத திணைக்களத்தின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரிப்பு…

(FASTNEWS|COLOMBO)புகையிரத கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமையால் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் உதவி வர்த்தகப் பிரிவு அதிகாரி என்.ஜி.இந்திகொல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, 47.53 மில்லியன் ரூபா மேலதிக வருமானமாகப் பெறப்பட்டுள்ளதுடன் திணைக்களத்தின் வருமானம் 67 தசம் 68 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக புகையிரதங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.