பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைக்கத் திட்டம்…

பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைக்கத் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் ஆரோக்கியமான போஷாக்கு உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தொற்றா நோயின் காரணமாக நாளாந்தம் 9 பேர் உயிரிழப்பதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.