
பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…
(FASTNEWS | COLOMBO) – முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 04 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(15) தீர்மானித்துள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.