
சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை…
(FASTNEWS|COLOMBO) சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் இலங்கை ஆரம்பிக்கவுள்ளது.
அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இலங்கையின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவர் சீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதுடன், விரைவில் இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வது குறித்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தாம் பேசவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.