
பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது
கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி என இனங்காணப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
(riz)