
இறக்குமதி செய்யப்படும் பழவகைகளில் மனித உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் இரசாயன திரவம் கலப்பு…
(FASTNEWS|COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்,திராட்சை,தோடம்பழம் ஆகியவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாய திரவங்கள் சேர்க்கப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த இரசாயன திரவங்களில், இந்நாட்டில் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள களைக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.
இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளில் தடை செய்யப்பட்ட இரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட பழவகைகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹரித அழுத்கே குறிப்பிட்டிருந்தார்.