7 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் இன்று(20) முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நாளை நள்ளிரவு 12 மணி வரையில் இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். குறித்த சேவைப் புறக்கணிப்பில் சுமார் 21000 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி இன்றும் நாளையும் எந்தவிதமான அஞ்சல் சேவைகளும் இடம்பெற மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தங்களின் கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் அரசாங்கம் தீர்வு வழங்காத பட்சத்தில், தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அஞ்சல் சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.