7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்டு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றிருப்பதை அடுத்து உடனடியாக அவர் தனது அறிவிப்புகளை செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்.

அமெரிக்காவில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு சில நாட்டு மக்களை உள்ளே அனுமதிப்பதுதான் காரணம் என டொனால்டு டிரம்ப் கருதுகிறார்.

எனவே, அந்நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்நாடுகள் என்பதை பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும் மத்திய கிழக்கு நாடுகள், வடஅமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை குறிப்பிட்டு இந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக வெளி விவகாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தடை விதிக்கப்படலாம் என கூறினார்.

அமெரிக்கா தனது பக்கத்து நாடுகளான கனடா- மெக்சிகோ இடையே அதிக அளவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது இரு நாடுகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.