70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் எட்வேர்ட் இளவரசர் பங்கேற்கவுள்ளார்..

2018 பெப்ரவரி மாதம் 04ம் திகதிக்கு இலங்கையின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. குறித்த கொண்டாட்ட நிகழ்வுகளில் பிரதான அதிதியாக பிரித்தானியாவின் எட்வர்ட் இளவரசர் பங்கேற்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபத் இளவரசி மற்றும் பிலிப் இளவரசரின் இளைய புதல்வரான எட்வேர்ட் இளவரசர் பிரித்தானியா அரசின் அரச முடிக்குரிய 09 ஆவது இளவரசர் ஆவார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கையில், வெளியுறவு அமைச்சின் ஊடாக பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#reeshma