05:11 PM – 2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாசிப்பினை நிறைவேற்றுகின்றேன். அனைவருக்கும் நல்லாசி கிடைக்கப் பெறுவதாக – நிதியமைச்சர்.
05:09 PM – நாட்டிலுள்ள பாரிய 100 தனியார் கம்பனிகளை அரசாங்கத்துடன் இணைய கோரிக்கை – நிதியமைச்சர்.
05:06 PM – இலத்திரனியல் மோட்டார் வாகனங்களுக்கான வரி குறைக்க தீர்மானம்.
05:04 PM – பழைய வாகன ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகள்.
05:03 PM – இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறும் வணிக செயற்பாடுகளுக்கு வரி.
05:02 PM – ATM மூலம் பணம் மீளப்பெறுவதற்கான கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
05:00 PM – 100 பொருட்களுக்கான தீர்வை குறைப்பு.
04:59 PM – கார்பனுக்கு புதிய வரி.
04:59 PM – சமூர்த்தி பயனாளிகளுக்கு மாதாந்தம் 5 கிலோகிராம் அரசி.
04:58 PM – 425 கிராம் நிறையுடைய உள்நாட்டு டின்மீன் 125 ரூபாய்.
04:56 PM – இரவு 9 மணிக்குப்பிறகு, அதிவேக நெடுஞ்சாலை கட்டணத்தில் 50 ரூபாய் குறைக்கப்படும்.
04:55 PM – 400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 25 ரூபாவால் குறைப்பு.
04:48 PM – பயறு 5 ரூபாய், பருப்பு 10 ரூபாய், வௌ்ளை சீனி 2 ரூபாய், கேஸ் 25 ரூபாய், மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் 5 ரூபாவால் விலை குறைப்பு.
04:45 PM – அரச சேவையாளர்களுக்கான 1000 சேவை நிலையங்களை அமைப்பதற்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:41 PM – போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக பொலிஸ் துறைக்கு 150 மில்லியன் ரூபா. தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:39 PM – புதிதாக துறவியாகுபவர்களுக்கு 2,500 ரூபாய் புலமைப்பரிசில்.
04:35 PM – ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் உபகரண கொள்வனவுக்கு வரி விலக்குடனான கடன் வசதி.
04:32 PM – இளைஞர் தொழில் பயிற்சி மையங்களுக்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:32 PM – சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண்பதற்கு 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. சுகந்ததாஸ அரங்கை புனரமைக்க 175 மில்லியன் ஒதுக்கீடு.
04:30 PM – காலம் சென்ற பண்டித் அமரதேவவின் ஞாபகமாக கலைக் கூடம் ஒன்றை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா.
04:27 PM – ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக, 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04:26 PM – அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளில் 10 வருடத்துக்கு மேல் தங்கியிருந்தால் வீடுகள் சொந்தமாக்கப்படும். இதற்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:24 PM – சமுர்த்தி வேலைத்திட்டம், “ஜன இசுறு” என்று பெயர் மாற்றப்படும். சமுர்திப் பயனாளிகளின் வருமானம் அதிகரிக்கப்படும்.
04:23 PM – மாடி வீடுகளைக் கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 40 சதவீத கடன்.
04:22 PM – இராணுவத்தை பாதுகாப்பது எமது கடமையாகும்..
04:20 PM – ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டொலர் வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள். இதற்காக 1221 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04:14 PM – தனி வீட்டுத் திட்டத்தில் முதலில் 5 இலட்ச வீடுகள் : மலையகத்துக்கு 25 ஆயிரம் வீடுகள்.வீடுகளை அமைக்க 2000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
04:10 PM – நாட்டில் சிறப்பான குடிநீர்த் திட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
04:07 PM – பதுளை, எல்ல, பண்டாரவளை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலா வலையமாக அபிவிருத்தி செய்யப்படும்.
04:07 PM – பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வேன்கள் 32 ஆசனங்களை கொண்டதாக அமைக்க வேண்டும்..
04:03 PM – முச்சக்கர வண்டிகளுக்கு புதியகார்கள். இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
04:03 PM – மொபிடல் நிறுவனத்தை பொது நிறுவனமாக பட்டியற்படுத்தல்.
04:02 PM – விஞ்ஞானம் தொழில்நுட்பங்களுக்காக 1 306 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:59 PM – பதுளையில் உள்ளூர் விமான நிலையம் அமைக்கப்படும்.
03:57 PM – நெனொ நிறுவனங்களுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:56 PM – 15 தொழிற்றுறை ஏற்றுமதி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.
03:52 PM – அதிவேக நெடுஞ்சாலை பகுதியில் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் வியாபார நிலையங்களை அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு தனியார் துறைக்கும் அழைப்பு.
03:50 PM – இலங்கையின் பெயரை பிரபலப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:48 PM – தொழிநுட்ப இயந்திரங்களின் இறக்குமதிக்காக 75 சதவீத வரி நீக்கம்.
03:46 PM – 100, 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுபவர்களுக்கு விசேட ஊக்கச் சலுகை.
03:45 PM – சிறப்பான முதலீட்டாளர்களுக்கு 5 வருடங்களுக்கான விசா.
03:42 PM – மெகா பொலிஸ் திட்டத்துக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
03:41 PM – வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் 250 தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக 300 மில்லியன் ரூபா முதலீடு.
03:34 PM – சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கடன் வசதிகள் : 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:35 PM – சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
03:34 PM – தனியார் பஸ் சேவைகள் 11 மணிவரை இயங்க வேண்டும்.
03:33 PM – கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும்.
03:30PM – வணிக நிலையங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:28 PM – தனியார் துறையினருக்கு 5 நாள் மற்றும் 45 மணிநேர வேலை
03:26 PM – இலங்கையில் படிப்பதற்கு விரும்பும் மாணவர்களுக்கு ஐந்து வருடம் சென்று வருவதற்கு வீசா
03:25 PM – பாலர் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு தவணையிலும் மருத்துவ சோதனை
03:24 PM – தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:23 PM – தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:22 PM – பார்மசி நிலையங்கள் பதிவு செய்யாவிட்டால் ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு
03:20 PM – பாலின வன்முறை மற்றும் பகிடிவதைகளை தடுப்பதற்கு பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிலையங்கள்
03:18 PM – 250 மில்லியன் ரூபா செலவில் களனி பல்கலைக்கழகத்தில் மின் கற்றல் மையம்
03:16 PM – மாணவர்களுக்கு இலகுவாக அறிவை பெற்றுக்கொள்வதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை பெற்றுக் கொடுக்க 4 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா
03:15 PM – பத்தாயிரம் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு மேலதிகமாக 2 ஆயிரம் மில்லியன் ரூபா.
03:14 PM – பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் 8 மணிவரை நீடிக்கப்படும்
03:13 PM – சிறிய வெட்டுப்புள்ளிகளால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாமல் இருக்கும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை மேற்கொள்ள 8 இலட்சம் ரூபா வழங்கப்படும். 300 மில்லியன் ஒதுக்கீடு
03:10 PM – பல்கலைக்கழகங்களில் முதல் மூன்று இடங்களை பிடிக்கு மாணவர்களுக்கு சர்வதேசத்தில் உயர்கல்வியை கற்பதற்கு புலமைப்பரிசில். இதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு –
03:08 PM – 2020 ஆம் ஆண்டு தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் சேர்த்து கொள்ளப்படுவர்.
03:06 PM – ருகுனு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கராபிட்டிய வைத்தியசாலையில் புதிய கட்டிடம் அமைக்க திட்டம்
03:04 PM – கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
03:03 PM – மாணவர்களுக்கு 2இலட்சம் ரூபா காப்புறுதி வழங்க தீர்மானம்
03:03 PM – விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு 175 மில்லியன் ஒதுக்கீடு
03:02 PM – மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சகல வங்கிகளிலும் கணக்குகள் திறக்கப்படும்
02:58 PM – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட கரையோர மாவட்ட மக்களின் ஜீவனோபாய விருத்திக்கு 1200 மில்லியன் ஒதுக்கீடு
02:57 PM -அடுத்த வருடம் க.பொ.த. உயர்தரத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் 175000 பேர் மற்றும் உயர்தர கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் 28000 பேருக்கு இலவச டெப்
02:56 PM – 1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்
02:55 PM – பாடசாலை தளபாடங்களுக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
02:55 PM – மொரகாகந்தை, உமா ஓயா திட்டங்களுக்கு 60045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
02:54 PM – 20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
02:52 PM – கல்விக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கல்.
02:52 PM – மன்னாரில் உள்ள தாரக்குளம் புனரமைக்கப்படும்.
02:48 PM – கொக்கோ, கோப்பி, மிளகு வெற்றிலை உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.
02:46 PM – மீன்பிடி கைத்தொழிலுக்காக உட்கட்டமைப்பு, நங்கூர வசதிகளுக்காக 1350 மில்லியன் ரூபா
02:46 PM – கோழி பண்ணையாளர்களுக்கு 15 ஆயிரம் குளிரூட்டி சாதனங்கள் வழங்கப்படும்
02:44 PM – மீன் பிடித் துறையில் 163 பில்லியன் இலாபம் கிடைத்துள்ளது. இதனை ஐந்து மடங்களால் அதிகரிக்க நடவடிக்கை
02:44 PM – ஏற்றுமதி சந்தைகளில் இடம்பிடிக்க பழங்களை பயிரிடுவதற்காக 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு
02:43 PM – இறப்பர் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்ய 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
02:42 PM – இறப்பர் உற்பத்திக்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
02:42 PM – தேயிலைத் தொழிற்றுறைக்கான வரி விலக்குகள் அளிக்கப்படும்.
02:41 PM – ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளுக்கான சில கட்டணங்களை நாம் இல்லாது செய்வோம்
02:41 PM – நெல், பழங்கள், தானிய வகைகள் மற்றும் பூக்கள் போன்ற துறைகளின் அபிவிருத்திக்கு, சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
02:41 PM – பெருந்தோட்டக் கம்பனிகள் 5,000 ஏக்கர் தோட்டங்களை மாத்திரமே வைத்திருக்கலாம்.
02:40 PM – பெருந்தோட்டத்துறைகள் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை மாத்திரமமே கொண்டிருக்கமுடியும். வேலை இழப்பு ஏற்படாது என்பதை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.
02:40 PM – புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்காக 15 சதவீத வட்டி நிவாரணம் வழங்கப்படும்.
02:39 PM – பிரதான 7 வகை மரக்கறிகளை உற்பத்தி செய்வதற்கு, அரசாங்கத்தினால் 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்படும்
02:38 PM – தெரிவு செய்யப்பட்ட பழங்களின் உற்பத்திக்கு, பெறுமதி சேர் உற்பத்தி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கான கடன் திட்டத்தையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
02:38 PM – தெரிவு செய்யப்பட்ட பழவகைகளுக்காக, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதற்காக கடன் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
02:38 PM – களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மத்தியதர அரிசி உற்பத்தியாளர்களுக்கு வட்டி நிவாரணம் வழங்கப்படும். இதற்காக, 400 மில்லியன் பாய் வழங்கப்படும்.
02:36 PM – விவசாய சமூபகார நிலையங்களை நிறுவுவோம்.
02:36 PM – பொருளாதார ரீதியில் பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை, விவசாயத்துக்காக வழங்குவோம்
02:36 PM – நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். விவசாயத்துக்காக பயன்படுத்தாத நிலங்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கலப்பு விவசாய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
02:34 PM – விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருவாயானது, மற்றைய நாடுகளில் பெறப்படும் வருமானத்தின் பாதித்தொகையாகும்.
02:34 PM – விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
02:32 PM – ஓய்வூதியத் திட்டம் அரசாங்கத்துக்கு பாரிய சுமையாக உள்ளது. ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றீட்டை எதிர்பார்க்கிறோம்.
02:32 PM – நிதி ஆதாரங்கள் மற்றும் நிதி வாய்ப்புக்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு அனைவருக்கும் வாய்ப்புக்களை அணுக முடியும்
02:31 PM – நாம் கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கிய உறுதியை தற்போது வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்
02:29 PM – தொழில்நுட்ப மற்றும் தொழில் முறைக்கல்வியை விசாலப்படுத்துவோம்.
02:29 PM – அரசாங்கத்துக்கு ஓய்வூதியச் சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் இதற்கு மாற்றீடு வழியொன்றை தேடுவதற்காக, ஓய்வூதியத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்
02:29 PM – வயதானவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஓய்வூதியம், அரசாங்கத்துக்கு சுமையாக உள்ளது. அதனால், எதிர்காலத்தில், அவர்களுக்கான சிறந்த திட்டமொன்று வகுக்கப்படும்.
02:28 PM – தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வராமல், அரசியல் நோக்கத்துக்காக, மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். எதிர்காலத்தில் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்நோக்குவதற்காக, எம்மிடமுள்ள தீர்வுகளை முன்வைப்போம்.
02:28 PM – கிராமப்புறங்களுக்கு இந்த வரவு-செலுத்திட்டத்தின் மூலம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதுடன், அதன் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் வைக்கப்படவுள்ளன.
02:27 PM – காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன் படிக்கையினை முன்னோக்கி கொண்டுசெல்வோம்.
02:25 PM – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தில் காணப்படும் வேறுபாடுகள், 2020ஆம் ஆண்டளவில் முற்றாக நீக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
02:25 PM – அரசாங்கத்தால் வாங்கப்படும் கடன்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்
02:24 PM – வரலாற்றில் முதன்முறையாக, வரவு – செலவுத் திட்டத்துக்காக, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
02:24 PM – பொதுத்துறைகளுக்கு முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்
02:24 PM – அபிவிருத்தியின் பிரதிபலன், முழு நாட்டிலுமுள்ள அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் வியாபித்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
02:23 PM – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக அவதானம் செலுத்தப்பட்டு தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
02:23 PM – காணி, சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும்
02:22 PM – சிறு மற்றும் மத்தியதர வியாபாரங்களை அதிகரித்துக்கொள்ளவும் அபிவிருத்திக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
02:22 PM – நாட்டின் வசதிகளை மேம்படுத்தவும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்படும்
02:21 PM – தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், இயந்திரம், ரோபோ, தகவல் தொழில்நுட்பம் போன்றன, நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானவை.
02:20 PM – வரவு-செலவுத்திட்டத்தின் பற்றாக்குறைகளை தீர்த்து வைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்
02:19 PM – சுதந்திரமான வர்த்தகமல்ல, சாதாரண வர்த்தகத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக, சர்வதேசத்திலிருந்து கிடைக்கப்பெறும் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
02:19 PM – நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்
02:19 PM – அனைத்துக்கும் ஒரு வருவாயை பெறுவதே இந்த வரவு-செலவுத்திட்டத்தின் தொனிப்பொருளாகும்
02:18 PM – தனியார் துறையை ஆதரிப்பதற்காக, முதலீட்டு மண்டலங்கள், சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான கொள்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்
02:17 PM – சமுத்திரச் சொத்துக்களிலிருந்து அதிக பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேலையின்மைப் பிரச்சினை குறைந்து வருகிறது.
02:16 PM – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு சமூகமளித்தார்
02:16 PM – ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
02:15 PM – உயர் வேலைவாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் மற்றும் மாற்று வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்
02:15 PM – 2017ஆம் ஆண்டு அபிவிருத்திக்கான ஆண்டாகும்
02:13 PM – அடுத்த வருடத்தில் நாட்டின் பொருளாதரத்தை முன்னேற்றுவதையே நோக்கமாக கொண்டு அரசாங்கம் இயங்கவுள்ளது
02:13 PM – நாட்டுக்குள் ஒரு நட்புறவுள்ள பொருளாதாரத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
02:12 PM – முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது
02:09 PM – அடுத்த தலைமுறைக்கான நல்லதொரு வரவு-செலவுத்திட்டமாக இது அமையவுள்ளது
02:09 PM – அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையிலான வரவுச் – செலவுத் திட்டமாக இது அமையும். இதற்காக, 2017ஆம் ஆண்டு – வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
02:08 PM – இலங்கையில் அனைத்தின மக்களும் பங்குகொள்ளும் வகையிலான சமூக அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
02:07 PM – சமூக பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை ஏற்படுத்தி, சிறுவர்கள், இளைஞர் – யுவதிகளுக்கான சிறந்ததோர் எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
02:06 PM – அனைத்துத் துறைகளிலும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் தனியார்த் துறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
02:04 PM – உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில்,இலங்கையின் பொருளாதார நிலைமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுசார்ந்த துறைகள் மீது அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
02:04 PM – வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
02:02 PM – நாட்டுக்குள் நல்லிணக்கத்தையும் மக்களிடையே ஒன்றுமையை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
02:02 PM – நாட்டில் நல்லதோர் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான, நல்லாட்சி அரசாங்கத்தின் 2ஆவது வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பத்தில் மகிழ்ச்சி.
02:01 PM – நிதியமைச்சர் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஆரம்பித்துவிட்டார்.
01:59 PM – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சபைக்கு வந்துவிட்டார்.
01:59 PM – அமைச்சர் கயந்த கருணாதிலக்க உரையாற்றுக்கிறார்.
01:59 PM – சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.
01:58 PM – சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு சமூகமளித்தார்.
01:01 PM – 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
70 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.
இலங்கையின் 70 ஆவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
“அனைவருக்கும் நன்மைத்தரும் விரைவான அபிவிருத்தியை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இம்\முறை பாதீடு முன்வைக்கப்படுகின்றது.
குறித்த இந்த பாதீட்டில், வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு, வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டம், முதலீட்டு அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.