(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், தான் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பில் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்க விரும்புவதாகவும் தன்னிலையை அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் 2020ம் ஆண்டு தனிக்கட்சி தொடர்பில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.