700 கோடி ரூபாய் வைரம் கொள்ளை- மேலும் 02 பேர் கைது…

(FASTNEWS| COLOMBO)– 700 கோடி ரூபாய் வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் பேலியகொடையில் இன்று(01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொள்ளையின் பின்னர் வைரம் மற்றும் இரத்தினக்கற்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு இவர்கள் உதவி புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதில் ஒருவரின் சகோதரர், டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூசுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.