
நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை மையப்படுத்தி அத்தியாவசிய பொருட்களது விலை அதிகரிப்பு..
(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்களது விலை வெகு விரைவாக உயர்ந்துள்ளதோடு, அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, சீனி, பருப்பு, டின் மீன், கிழங்கு மற்றும் உப்பு மற்றும் மரக்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்படுவதோடு காலாவதியான பொருட்களையும் வியாபாரிகள் விற்க முயல்வதாகவும் குறித்த இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.