
அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த நடவடிக்கை…
(FASTNEWS|COLOMBO) அலங்கார மீன் வளர்ப்பினை மேம்படுத்த, தேசிய நீர்வள அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் கீழ் நீர்வாழ் தாவரங்களின் செய்கையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுயதொழில் வாய்ப்பு தொடர்பில் ஆர்வமாகவுள்ள பொதுமக்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் வசதிகளை பெற்றுக்கொடுக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.