71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
காலிமுகத்திடலில் நடைபெறும் தேசிய சுதந்திர தின பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலி தம்பதியர் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும், ஜனாதிபதியும் மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றதன் பின்னர், 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆரம்பமாகியுள்ளது.