யாழ்.பல்கலைக்கழகம் முழுவதும் துண்டுப்பிரசுரங்கள் காட்சிக்கு… (PHOTOS)

(FASTGOSSIP | COLOMBO) – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர், செயலாளர் மற்றும் மாணவர்கள் மூவரை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்ததினை தொடர்ந்து, எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முழுவதும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 09ம் திகதி குறித்த மாணவர்களை எல்.டீ.டீ.ஈ அமைப்பினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வரும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக யாழ்.பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.