(FASTNEWS | COLOMBO) – ஐ.பி.எல் போட்டியில் நேற்று(12) மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது என சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் தளத்தில் ஹர்பஜன் தெரிவிக்கையில்;
‘நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த ஐ.பி.எல் போட்டியில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டுக்கள். நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.
Heart breaking result for us last night @ChennaiIPL don’t know what more I can say..thank you each and everyone of you who supported us thru out the season.. ???????????? congratulations to @mipaltan for the 4th IPL Cup ???? still unable to understand how we lost ????
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2019