
சிறு மற்றும் நடுத்தர அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை
(FASTNEWS| COLOMBO) – நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலய மட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு போசாக்கான அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொடுக்க இதன்மூலம் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.