
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு தடை
(FASTNEWS | COLOMBO) – அமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சோபா உடன்பாடு தொடர்பாக, முன்னதாக கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். அதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.