வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு சபை நம்பிக்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு சபை நம்பிக்கை

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபை தெரிவித்தள்ளது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக இலங்கையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரம் அன்றி சர்வதேச ரீதியில் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் மீண்டும் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இலங்கை சுற்றுலா துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

 

(அரச தகவல் திணைக்களம்)