வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி

வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி

(FASTNEWS | COLOMBO) – வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சிகரட்டுக்கான கேள்வியை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.