எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

எதிர்வரும் 02 மாதங்களுக்குள் நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – பெரும்போகத்தில் கொள்வனவு செய்த நெல்லை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களின் ஊடாக நெல்லை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார்.

இம்முறை பெரும்போகத்தின் போது, 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்தது. இதற்காக, இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க குறிப்பிட்டார்.