
சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்
(FASTNEWS | COLOMBO) – சர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் ரஷ்யாவிலும், உக்ரேனிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த இந்த நிகழ்ச்சியை இலக்காக வைத்து இலங்கையின் தேயிலை உற்பத்திகள் பற்றிய பிரசார திட்டத்தை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்திகளை 12 நாடுகளில் பிரபல்யப்படுத்துவதற்காக பிரசார திட்டமொன்றை முன்னெடுத்தது.
இதற்காக உலக புகழ்பெற்ற டென்சுகான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.