
சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சில நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சுற்றுலாத்துறை மேம்படும் நிலையை எட்டத் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.