தீவிரவாதத் தாக்குதலையடுத்து இரத்தினக்கல் வியாபாரம் முற்றாக வீழ்ச்சி

தீவிரவாதத் தாக்குதலையடுத்து இரத்தினக்கல் வியாபாரம் முற்றாக வீழ்ச்சி

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலையடுத்து இரத்தினக்கல் வியாபாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு சங்கத்தின் தலைவர் புன்சிரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் கொள்வனவுக்காக வெளிநாட்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வருகை தராமையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்யும் மத்திய மற்றும் சிறியளவிலான இரத்தினக்கல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.