(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் இன்றைய தினம் (13) முன்னிலையாக தேவையில்லை என விஷேட தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.