சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது

(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் உள்ள சகல மதுபான சாலைகளும் 2 நாட்கள் பூட்டப்பட வேண்டும் என அரசு அறிவித்த நிலையில் வாகனத்தில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 03 ​பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் முடமாவடி மதுபான சாலைக்கு முன்பாக வைத்து இன்று(15) காலை 8.00 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.