உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

(FASTNEWS|COLOMBO) – உடவளவ தேசிய சரணாலயத்திற்கான புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சப்கரமுவ பல்கலைக்கழகமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இதற்கமைய பலாங்கொட கப்புகல பகுதியின் ஊடாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ் வேலைத்திட்டத்திற்காக ஒரு கோடி 60 இலட்சம் ரூபா தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.