
நாளை தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத் திட்டம்
(FASTNEWS|COLOMBO) – தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை(21) ஆரம்பமாகவுள்ளது.
சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.
அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.