அசாத் சாலிக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் விசாரணை

(FASTNEWS| COLOMBO) – நீதிபதிகள் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் என முன்னாள் மேல் மாகாண சபை ஆளுநரான அசாத் சாலி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு இன்று(26) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

குறித்த கருத்தில் இனங்களுக்கு இடையே வெறுப்பினை தூண்டும் வகையில் கருத்துக்கள் உள்ளடங்குவதாக தெரிவித்து சட்டத்தரணி பிரேமனாந்த் சீ.தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது

அதன்படி, கடந்த மே மாதம் 04ம் திகதி தெரிவிக்கப்பட்ட குறித்த கருத்துத் தொடர்பிலான செய்தி அறிக்கைகள் தொடர்பான திருத்தப்பட்ட மற்றும் வெளியிடப்படாத காட்சிகள் உள்ளடங்கிய காணொளிகளை குறித்த பிரிவுக்கு வழங்குமாறு நீதிமன்றம் அது தொடர்பிலான இரண்டு மின்னணு ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.