ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விஜயம்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விஜயம்

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகை 57 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் சீன பயணிகளின் தடை நீக்கப்பட்ட நிலையில், இலங்கைக்கு அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.