
கந்தர கடல் தொழில் துறைமுகத்தை நிர்மாணிக்க நிதி ஒதுக்க அமைச்சரவை அனுமதி
(FASTNEWS | COLOMBO) – கந்தர கடல் தொழில் துறைமுகத்தை நிர்மாணித்தல் மற்றும் இதற்காக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கந்தர மற்றும் குருநகர் கடல் தொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை திட்ட ஆலோசனை Bouygues Travaux Publics நிறுவனத்தினால் சுயாதீன தள ஆய்வு அறிக்கை மதிப்பீடு மற்றும் தேசிய பொறியியலாளர் மதிப்பீடொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த போதிலும் குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் தள ஆய்வு அறிக்கை திட்ட ஆலோசனை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தவறியுள்ளது என்பதினால் இந்த நிறுவனம் தொடர்பில் நடைமுறைப்புடுத்தப்பட்ட பெறுகை செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் கந்தர கடற் தொழில் துறைமுக தேசிய நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்களும் விவசாய கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர்பாசனம் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-தகவல் திணைக்களம்-