மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO)- காய்கறி வகைகளின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

போஞ்சி , கரட் 1 கிலோகிராம் மொத்த விலை 80 இற்கும் 100 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் 1 கிலோகிராம் 30 இற்கும் 40 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கோவா 1 கிலோகிராம் மொத்த விலை 30 இற்கும் 35 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுகிறது. கறிமிளகாய் மாத்திரமே 1 கிலோகிராம் மொத்த விலை 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி 1 கிலோகிராம் மொத்த விலை 25 இற்கும் 35 இற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.