’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

(FASTNEWS|COLOMBO)- ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்ததற்காக அமலா பாலுக்கு ஒருபக்கம் பாராட்டும், இன்னொரு பக்கம் டோஸும் விழுந்துகொண்டிருக்கிறது.

சுப்பு தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. பட டீஸரில் இதுவரை ஆடையே இல்லாமல் வந்துகொண்டிருந்த அமலாபால் டிரெய்லரில் பட்டுபுடவையுடன் உடலை முழுவதுமாக கவர் செய்து விதவிதமான ஆடை அணிந்து நடித்திருப்பது டிரெய்லர் பார்த்தவர்களை யோசிக்க வைத்தது.

இதுபற்றி அமலாபால் கூறும்போது,
‘இயக்குனர் ரத்னகுமார் இக்கதையை என்னிடம் சொன்ன போது புதுமையான கதையாக இருந்ததால் ஏதாவது ஹாலிவுட் படத்தை பார்த்து சுட்டுவிட்டீர்களா என்று சந்தேகத்துடன் கேட்டேன். இது அவர் எழுதிய நிஜக்கதை என்பதை அவர் கதை சொன்னவிதத்திலிருந்து தெரிந்துகொண்டேன்.

ஆடை இல்லாமல் நடிக்கும் காட்சிபற்றி விளக்கியபோது எனக்கு தயக்கம் ஏற்பட்டது. கேமராமேன் முதல் லைட்மேன்வரை எல்லோரையும் அழைத்து பேசினேன். அந்த காட்சி நடிக்கும் நேரம் வந்தபோது உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது.

படப்பிடிப்பு நடக்கும்போது இயக்குனர், கேமராமேன் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் எல்லோருமே கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள். பாஞ்சலியின் மானத்தை 5 கணவன்மார்கள் காப்பாற்றியதுபோல் 15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ என்று அமலாபால் கூறியுள்ளார்.