
பாண் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) – கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 08 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாண் ஒன்றின் விலையை, இன்று(17) நள்ளிரவு முதல் 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.