ஆடை படத்துக்கு தடை கோரி மனு

ஆடை படத்துக்கு தடை கோரி மனு

(FASTGOSSIP|COLOMBO) – அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்டரில் அமலா பால் நிர்வாணமாக தோன்றும் காட்சி மற்றும் டீசரிலும் அமலா பாலின் நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்துவந்தன.

இந்த போஸ்டர்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சுவரொட்டிகளிலும் மற்றும் பிற விளம்பரங்களிலும் ஆபாச காட்சி இடம் பெறுவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும், தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்காகவும் போராடுவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.