
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) – கவ்டுல்ல தேசிய பூங்கா பகுதிகளில் 400 க்கும் அதிகமான யானைகள் நடமாடுவதை தற்போது அவதானிக்க முடிவதாக கவ்டுல்ல தேசிய பூங்கா பொறுப்பதிகாரி பிரதீப் குமார எட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
இந்த யானைகளின் வேடிக்கை செயற்பாடுகளை அவதானிப்பதற்காக இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.