
யால தேசிய வனத்திற்கு ஒரு மாதம் பூட்டு
(FASTNEWS | COLOMBO) – யால தேசிய வனத்தின் இல – 01 பிரிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 31ஆம் திகதி வரை பூட்டப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக குறித்த சரணாலயம் மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.