உலகிலேயே கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையில்

உலகிலேயே கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தி இலங்கையில்

(FASTNEWS | COLOMBO) – உலகில் ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறி உற்பத்தியானது இலங்கையில் இடம்பொறுவதாக விவசாய நீர்பாசண கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொற்றா நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கெக்கிராவ பகுதி பாடசாலை ஒன்றில் மாணவர்களின் உணவுக்காக இலவசமாக அரிசியை வழங்கும் வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.