இலங்கையின் தேயிலைக்காக கிடைத்து வந்த, சர்வதேச தரச் சான்றிதழ்கள் பல இரத்து

இலங்கையின் தேயிலைக்காக கிடைத்து வந்த, சர்வதேச தரச் சான்றிதழ்கள் பல இரத்து

(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் தேயிலைக்காக கிடைத்து வந்த, சர்வதேச தரச் சான்றிதழ்கள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கை தேயிலைக்கு சர்வ​தேச சந்தையில் காணப்பட்ட கேள்வி குறைவடைந்துள்ளதென, பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விசேடமாக ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தேயிலைக்கு அதிக கேள்விகள் காணப்பட்ட நிலையில், தற்போது அவை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தோட்ட உரிமையாளர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் உரிய முறையில் தோட்ட நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு வழங்கப்பட்டிருந்த சர்வதேச தரச் சான்றிதழ் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையின் தேயிலை வர்த்தக சந்தையை வெற்றிக்கொள்ள முயற்சிக்கும் மற்றைய நாடுகளின் சதியாக இந்த தலையீடு அமைந்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.