
மரமுந்திரிகை இறக்குமதியை இடை நிறுத்த தீர்மானம்
(FASTNEWS|COLOMBO ) – நாட்டில் இம்முறை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ளதனால் மரமுந்திரிகை இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடந்த சில வருடங்களில் மரமுந்திரிகை அறுவடை 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்த அறுவடை இம் முறை 2 மடங்காக அதிகரித்திருப்பதால் மரமுந்திரிகையின் இறக்கமதி நிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.