கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு துறைமுக நகரத்துக்குரிய இடமானது, கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் தொகுதியாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலானது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ​கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 446.6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம் என அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசமானது, இதன் பின்னர் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இடமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.