ஆசிய அபிவிருத்தி வங்கி 161 டொலர் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ஆசிய அபிவிருத்தி வங்கி 161 டொலர் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

(FASTNEWS | COLOMBO) – ரயில்வே சேவையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 161 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் இன்று(20) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

28,920 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான இந்த நிதியுதவி 29 வருடங்களுக்கான கடனாக வழங்கப்படவிருப்பதுடன், இதில் ஒரு மில்லியன் டொலர் மீளச் செலுத்தத் தேவையற்ற நன்கொடையாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் இந்தக் கடனானது 29 வருடங்களில் மீளச்செலுத்தவேண்டியதுடன், இது 8 வருட சலுகைக் காலத்தைக் கொண்ட 0.5 வீத (+LIBOR) வட்டியைக் கொண்ட கடனாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.