
எதிர்பார்ப்பு பூரணமாகவில்லை – அநுர
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை.
எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து போகவும் மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இத் தேர்தலின் மூலம் எமக்கு கிடைத்த நாடாளுமன்ற உறுப்புரிமைகளைக் கொண்டு, நாட்டுக்கு எம்மாலான உயரிய சேவையை வழங்குவோம்’ எனத் தெரிவித்தார்.
(riz)