சுற்றிவளைக்க தயாராகும் சஜித்; அதிரடி அறிவிப்பு

சுற்றிவளைக்க தயாராகும் சஜித்; அதிரடி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக நியமிக்குமாறு கோரி அலரி மாளிகையை சுற்றிவளைக்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக அரசில்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தலுக்காக திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலை ரணில் வழங்க மறுத்தால், வேட்பாளரின் பெயரை அறிவிக்கும் வரையில் அலரி மாளிகையை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் செயற்பாடு கட்சியை பாதுகாப்பதற்கும் மற்றும் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வார இறுதிக்குள் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லையெனில், அறிவிப்பு வெளியாகும் வரையில் சுற்றிவளைப்புப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாளர்கள் தயாரகியுள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.