![அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையை ஊக்குவிக்க கடனுதவி [VIDEO] அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையை ஊக்குவிக்க கடனுதவி [VIDEO]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2019/09/PEDDY.jpg)
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையை ஊக்குவிக்க கடனுதவி [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படாமலிருந்த பகுதிகளிலும் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
குறிப்பாக சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று கிழக்கு, அக்கரைப்பற்று மேற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, பொத்துவில், மத்தியமுகாம், தம்பிலுவில், திருக்கோயில்,அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், மல்வத்தை, கோமாரி, சடேந்தலாவ, இறக்காமம், சவளக்கடை, உகன, ஹிங்குரான, மகாஓயா, பதியத்தலாவ, லகுகல, தெஹியத்துக்கண்டிய, பாணம, பன்னல்ஓயா, மாயாதுன்ன மற்றும் நாமல்தலாவ ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்களுக்கு உட்பட்ட 1,45 000 மேற்பட்ட ஹெக்டயர் நிலங்களில் இம்முறை மகாபோக நெற்செய்கையில் நெற்செய்கையில் விவசாயிகள் பரவலாக ஈடுபடவுள்ளனர்.
கடந்த காலங்களில் விவசாய அமைச்சு மானியத்திட்டத்தின் கீழ் விதைநெல், உரம் ஆகியவற்றை மானியமாக வழங்கியுள்ளதுடன் விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இம்மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளைகள் அனைத்திலும் கடன் உதவிகள் வழங்கி வருகின்றமையினால் செய்கை பண்ணப்படாமல் இருந்த காணிகளிலும் நெற்செய்கை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்-