இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை திறந்து வைப்பு

இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை திறந்து வைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஹோட்டல் பாடசாலை ஒன்றுக்கான புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

சுமார் 175 மில்லியன் ரூபா செலவில் திருகோணமலை குச்சவெளியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடமானது நேற்று(24) பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வர்த்தகவாணிப கைத்தொழில் கூட்டுறவு,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

.இப்பகுதி இளைஞர்களின் நீண்ட கால தேவையாக இருந்த இக் ஹோட்டல் பாடசாலை மூலமாக ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறிகள் இடம் பெற்று வருகின்றது இதனால் இளைஞர் யுவதிகள் குறித்த துறையில் தொழிற் தகைமை சான்றிதழ் பெறக்கூடியதும் தொழிற்தகைமை மிக்கவராகவும் காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இதில் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், தொழிற் பயிற்சி அதிகார சபையின் உயரதிகாரிகள்,பயிற்சி தொடர்பான இளைஞர் யுவதிககள் என பலர் பங்கு கொண்டார்கள்.

Image may contain: house, tree, sky and outdoor

Image may contain: 9 people, people smiling, people standing and indoor

Image may contain: 7 people, people smiling, people standing

Image may contain: 9 people, people standing and indoor