வாக்காளர்கள் புர்கா ஆடைகளை அணிவது தடை

வாக்காளர்கள் புர்கா ஆடைகளை அணிவது தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்கு சாவடிகளுக்கு செல்லும் போது, வாக்காளர்கள் புர்கா ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்காளர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் பொருட்டு இம்முறை புர்கா ஆடைக்கு விசேட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நாளில், புர்கா மீதான தடை பாதுகாப்பு அதிகாரிகளின் கடமையை எளிதாக்கும் எனவும் எதிர்காலத்தில் புர்கா மீதான தடை குறித்து வாக்காளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.