வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இல.அறிமுகம்

வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இல.அறிமுகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் அதிக விலைக்கு எரிவாயுவை விற்கும் சமையல் எரிவாயு வர்த்தகர்கள் மீது சோதனை நடத்தி வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக முறைப்பாடுகளை அளிக்குமாறு நுகர்வோர் நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த முறைப்பாடுகளை 1977 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.